Thursday, May 3, 2012

அம்மா

அம்மாவை பிடிக்கும்  அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பாட்டு.

Tuesday, April 24, 2012

நீண்ட கால முதலீடு -பங்கு-1


பாரதி ஏர்டெல் நிறுவண பங்கு விலை மிகவும் சரிந்து உள்ளது. நீண்ட கால முதலீடாக வாங்க நினைப்போர் 280-320 ரூ விலை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.
முதலீட்டு காலம் -6 மாதம் முதல் 1 வருடம் வரை
ஸ்டாப் லாஸ் -260 ரூ
இலக்கு விலை—400+

குறிப்பு.

ஒரு 10000 ரூபாய் இன்வெஸ்ட்  எனில்  5 முறை 2000 ரூ  ஆக இன்வெஸ்ட்  செய்யவும்.

இது என்னுடைய பரிந்துரை மட்டுமே.
Wednesday, February 29, 2012

நகைச்சுவை வாரம்


இந்த வாரம் நகைச்சுவை வாரமாம்,  சன் டிவியில்.

காதலிக்க நேரமில்லை படம்  . என்ன ஒரு படம். சான்சே இல்ல.
இதை யாராவது ரீமேக் பன்னுங்கப்பா.
அதிலும்  ஒஹோ புரொடக்சன்ஸ்  காமெடி. .
நாகேஸ்+ பாலையா கூட்டணி. வயிரு  வலி வரும் அளவுக்கு சிரிப்பு.
 இரவு பொழுது இனிமையாக  இளையராஜா பாட்டு அல்லது எதாவது பழய பட நகைச்சுவை  எனக்கு போதுமானதாக இருந்தாலும்  இந்த படம் பார்த்தது  ரெம்ப மகிழ்ச்சி.
ரெம்ப நாளுக்கு முன்னால் பாட்டுக்கு பாட்டில் ஒரு வயதான பெரியவர்   காதலிக்க நேரமில்லை பாட்டு பாடி அசத்தினார்.
அது எல்லாம் வீட்டில் இருக்கும் போது பார்த்த நினைவு வந்து போனது.

Wednesday, February 22, 2012

ஆரோக்கிய வாழ்வு

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இன்று  மின் அஞ்சலில் வந்தது.

Friday, February 17, 2012

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே


அலுவலக வேலையாக சென்னை சென்று வந்தேன்.
சென்னை செல்வது என்று முடிவானதும்  அண்ணன்  கேபிள் சங்கர்  பதிவில் உள்ள எதாவது ஒரு கடீக்கு போய் புல் கட்டு கட்டுவது எண்ட்டு  முடிவு .
அதற்கு ஒரு கம்பனி வேண்டாமா?  நம்ம ஊருக்கர்ர    பாசக்கர பய ஒருத்தனையும்  போனில் கூப்பிட்டாச்சு,
நான் செலக்ட் பன்னியது THABA EXPRESS.
 சும்மா சொல்லக்கூடாது. அருமையான சாப்பாடு. மிக மலிவான விலை.
100 ரூபாக்கு அவர்கள் கொடுத்த பபேட் REALLY WORTH MORE.
அவர்கள் மெனு
1.   ஜிலெபி
2.   ரோடி/ நான்/ருமாலி ரொட்டி/ஆலு ரொட்டி( 4 ம் இருந்தது)
3.   வெஜ் புலவ்
4.    தால் பிரை
5.   வெஜ் கறி& பாகல்காய் மசாலா
6.   சைனீஸ் க்ரேவி
7.   நூடுல்ஸ்
8.   வெஜ் சால்ட்
9.   பூந்தி ரைத்தா
10. தயிர் சாதம்
கடைசியாக  ரசமலாய்.

சும்மா சொல்லக்கோடாது. ஒவ்வொர் ஐட்டமும் அருமை.
குறிப்பா சொல்லனும்னா  வெஜ் புலாவ். நல்ல தரமான  பாசுமதி அரிசில செஞ்சு அதுக்கு வெஜ் கறி +பூந்தி ராய்தா காம்பினேசன் –சூப்பர்
சூடான் ஜாங்க்ரி – நானும் நன்பரும் ஆளுக்கு 5 சாப்பிட்ட்டொம்.ஆணாலும் ஒரு புளு ஜீன்ஸ்+வெள்ளை  டி சர்ட் பொட்ட பொன்னு 8 சாப்பீட்டுச்சு.

முதலில் கொஞஜம் கூச்சமாக இருந்தது. ஆனால் நம்ம விட பெரிய ஆளுக, கொஞசம்  ஐ.டி  யுவதிகள்,  2-3 குடும்ப மக்கள் இவங்க எல்லாம் நம்மல விட ”சிறப்பாக செயல் பட்டதில்” நமக்கும்  கூச்சம் போயிந்தே.

நம்ம நண்பருக்கும் எனக்கும் பரம திருப்தி.பாழாய் போன வ****த பவன் அல்லது நீல போர்டு ச****ண பவண் போய் அங்கு சாப்பிட்டதில் பாதி சாப்பிட்டால் கூட 400+ பில் வரும்.
கடைசியாய் அந்த தயிர் சாதம். சும்மா . இப்ப நினைச்சா கூட+அந்த ஊருகாய்.( சரக்கு அடிக்கும் பொது அந்த ஊருகாய் இருந்தா அதுதான் சொர்க்கம்)
இந்த தயிர் சாதம் மட்டும் சென்னைல  ஒரு கடைல 35ரூ விக்கான்.
ஆனாலும்  நானும் நம்ம நண்பரும்  முடிஞ்ச மட்டும் ஒரு கட்டு கட்டி விட்டு புறப்பட்டோம்,

நாங்க கிளம்பும் போது  அந்த புள்ள மறுபடியும்  நான்/ரோட்டி  எடுத்து  ஆரம்பிட்ச்சது. (மறுபடியும் முதல்ல இருந்தா)

மொத்தத்தில்  சிறப்பு எண்று பார்த்தால்
நல்ல தண்ணீர் + மினரல் பாட்டில் தான் வாஙக அவசியம் இல்ல
நல்ல விசாலமான ஹால்
செல்ஃப்  ச்ர்விஸ்
குறை
தட்டு ரெம்ப சின்னது
சில சம்யம் ரொடி/நான்   காலியானால் டாபாப் செய்ய நேரம் ஆகுது.
ஆனாலும் நம்ம ஆளுக வெயிட் பண்ண யோசிக்கல.
கடைசியாக  10ரூ கொடுத்து ஒரு சுவிட் பீடாவுடன்  முடித்தோம்.
பின் குறிப்பு.
நம்ம நண்பர் நேரா கவுண்டருக்கு போய் இந்த 100ரூ லன்ச் எல்லா நாளும் உண்டா?+எத்தனை மணிமுதல் எத்தன மணி வர என்று முக்கிய தகவல் சேகரித்தார்.
அவர் சென்னை மேற்கு மாம்பலதில் ஒரு மான்சனில் இருக்கார். இந்த சனி மதியம் அவர் மான்சனில் இருந்து 5பேர் கொண்ட அணியாய் செல்லதிட்டம்/
கூடிய விரைவில் அந்த பஃபெ  விலை ஏறினாலோ/நிறுத்தபட்டாலோ  நான்  பொறுப்பு அல்ல

Tuesday, January 17, 2012

இதய தெய்வம்

இன்று புரட்சி தலைவர்  எம்.ஜி.ராமசந்திரன் பிறந்த நாள்.


ஏழை எளிய மக்களின்  தோழன்

        சத்துணவு தந்த சமத்துவ நாயகன்.

தலைவா.
               உலகம் உள்ளவரை உன் புகழ் பாடுவோம்


இதயக்கனிக்கு நினைவஞ்சலி